டென்னிஸ்: காலிறுதியில் ரேவதி

ஆமதாபாத்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் மாயா ரேவதி காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் ஆமதாபாத்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி, இத்தொடரின் 'நம்பர்-8' அந்தஸ்து பெற்ற ஜப்பானின் நகாட்டாவை சந்தித்தார். தமிழகத்தை சேர்ந்த ரேவதி, சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள நடாலின் மல்லோர்கா அகாடமியில் பயிற்சி பெற இணைந்துள்ளார். நேற்று சிறப்பாக செயல்பட்ட ரேவதி, 2-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஜீல் தேசாய், சக வீராங்கனை பூஜாவை சந்தித்தார். ஒரு மணி நேரம், 42 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஜீல் தேசாய், 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காஷிஸ், ரதி ஜோடி, சோகா, ஆகான்ஷா ஜோடி காலிறுதிக்கு முன்னேறின.

Advertisement