பிரபல மலையாள இயக்குனர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்

6

கோழிக்கோடு: பிரபல மலையாள சினிமா கதாசிரியர், இயக்குனர் எம்.டி. வாசுதேவ நாயர் ,91 உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.


மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியர், இயக்குனர் என அனைவராலும் போற்றப்பட்டு வருபவர் எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர். 91 , 23 வயதிலேயே நாலு கேட்டு என்கிற நாவலை எழுதி அதற்காக கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றவர் .1965ல் முறப்பெண்ணு என்கிற படத்திற்கு கதை எழுதியதன் மூலமாக சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார்.



மம்முட்டி, மோகன்லால், பிரேம் நசீர் உள்ளிட்ட பலர் இவரது கதைகளை தழுவி உருவான படங்களில் நடித்து பிரபலமானார்கள். 1973 இல் நிர்மாலயம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த இவர் ஆறு படங்களை இயக்கியுள்ளார்

1989ல் மம்முட்டி நடிப்பில் வெளியான ஒரு வடக்கன் வீர கதா என்கிற படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும், 2005-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும், கேரள சாகித்ய அகடாமி விருதையும் பெற்றுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (டிச.25) இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement