மதுபான தொழிற்சாலையில் தவறி விழுந்து ஊழியர் பலி

குன்றத்துார், குன்றத்துார் அருகே படப்பையில், தனியார் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் கூரை சீரமைக்கும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது.

இதில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவேந்தன், 25, உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு, கூரை அமைக்கும் பணியின் போது, 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த மூவேந்தன், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement