ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங். எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்மையில் காலமானார். அவரது மறைவை அடுத்து அத்தொகுதியை காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம், வரும் பிப்., 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
ஜன. 10ம் தேதி முதல் ஜன.17 வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். ஜன.18ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜன.20ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் தி.மு.க., வேட்பாளர் சி.சந்திரகுமார் களத்தில் உள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தே.மு.தி.க., மற்றும் பா.ஜ., தேர்தலை புறக்கணித்துள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடும் என சீமான் கூறியிருந்தார்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் இன்று(ஜன., 14) நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கட்சி சார்பில் சீதாலட்சுமி களம் இறங்குகிறார். இது குறித்து கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடவிருக்கிறார்.
இவர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவருக்கு நாம் தமிழர் கட்சியினர் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (25)
வால்டர் - Chennai,இந்தியா
14 ஜன,2025 - 18:20 Report Abuse
மதிமுக?
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14 ஜன,2025 - 16:50 Report Abuse
இவனை எவனாவது கேள்வி கேட்டால் உடனே நீ தமிழனா அல்லது தெலுங்கர்கனா கன்னடனா மலையாளியா என்று கேள்வி ??..அனால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டான் ..ஒங்கொலிலிருந்து வந்தவன் திராவிடனா அல்லது தமிழனா என்று அவனை போய் கேளு ??.... திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொன்னது யார் ?? ...இவனுக்கு முருகன் முப்பாட்டனாம் ...கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியன் யார் ..இவனெல்லாம் தமிழனாம் ..தமிழன் என்று சொல்ல என்ன தகுதி இருக்குது ??...இவர்களுக்கு மானம் ரோஷம் உள்ள எந்த தமிழனும் ஆதரவு கொடுக்க மாட்டான் வோட்டு போட மாட்டான் ...
0
0
Reply
s.sivarajan - fujairah,இந்தியா
14 ஜன,2025 - 14:45 Report Abuse
தமிழ் தேசியமா, திராவிடமா மக்கள் எப்பக்கம் என்பதை அறிய சிறந்த சந்தர்ப்பம். முதல் முறையாக இரு நேரெதிரான கருத்தியளுக்கான தேர்வு.
0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14 ஜன,2025 - 16:21Report Abuse
என்ன கருத்தியல்?? ..ரெண்டும் ஒன்றுதான் ....ஒருத்தன் ஆட்சியில் கோவையில் குண்டு வெடித்தது ......அந்த குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் இன்னொருத்தன் .....இதில் என்ன கருத்தியல் இருக்குது?? ....
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14 ஜன,2025 - 14:09 Report Abuse
கொண்டையை மறைகிறார்களாம்...என்ன இவன் தமிழனா இல்லையா என்று DNA டெஸ்ட் பண்ணுவானுங்களா? திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொன்னது நாம் தமிழர் ...கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியன் ..இவனுங்கதான் தமிழனுங்களாம் ..இதிலிருந்தே இவனுங்க கொண்டை தெரியுது ... இவர்களுக்கு மானம் ரோஷம் உள்ள எந்த தமிழனும் ஆதரவு கொடுக்க மாட்டான் வோட்டு போட மாட்டான் ....
0
0
Anbu Raj - Gaborone,இந்தியா
14 ஜன,2025 - 15:33Report Abuse
-எல்லா இனத்தையும் பேரன்பு கொண்டு நேசிப்பவன்தான் நான்
நீங்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் எல்லோரும் அவரவர் இனத்தை அடையாளப்படுத்தி பெருமையோடு இருங்கள் ஒன்னும் பிரச்னை இல்லை
எப்போது நீங்களும் தமிழர்கள்தான் உங்கள் இனத்தை மறைத்து நாம் எல்லோரும் ட்ராவிடன்னு மக்களை தமிழர்களை அடிமைப்படுத்தி ஆள்வதற்க்காக ட்ராவிடன்னு பித்தலாட்டம் பண்ணும்போதுதான் வலிக்கிறது கருணாநிதி செய்த த்ரோஹம்
உங்கள் இனத்தை மறைப்பது இழிவாக தெரிய வில்லையா ?????
எங்களுக்கு நெறய வேலை இருக்கு DNA டெஸ்ட் எல்லாம் எடுப்பது எங்கள் வேலை அல்ல உங்களுக்கு உங்கள் இனம் மறந்துவிட்டது என்றால் எடுத்து பாருங்கள் அப்போதாவது தெரியுதான்னு பாப்போம்
- DNA எல்லாம் ஒண்ணும் தேவை இல்லை நீங்கள் நீங்களாகவே இருங்கள் நங்கள் தமிழர்கள் தமிழர்களாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை ?????
அவர் எப்படி தமிழர்களின் தந்தையானார் ??????
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14 ஜன,2025 - 12:38 Report Abuse
இந்த ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் தமிழர் 2021 வேட்பாளர் கோமதி , நாம் தமிழர் 2023 வேட்பாளர் மேனகா நவநீதன் ... இப்பொது சீதாலட்சுமி....அந்த நாம் தமிழர் பழைய வேட்பாளர்கள் எல்லாம் தேர்தலில் தோற்ற பிறகு ஊரை காலி செய்து தமிழ் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்களா ??...அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்க தகுதி இல்லையா ??....தேர்தலுக்கு தேர்தல் ஆட்களை மாத்தறானுங்க ..
0
0
Anbu Raj - Gaborone,இந்தியா
14 ஜன,2025 - 13:20Report Abuse
பெரிய கட்சின்னு சொல்லுகிறவங்கலாம் வேட்பாளரை நிறுத்தலை
அத சுட்டிக்காட்ட துப்பில்லை அது எப்படி சீமான் எது செஞ்சாலும் தற்குறித்தனமா எதாவது சொல்றது முதல்ல மண்டமேல இருக்கிற கொண்டய மரைங்க
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14 ஜன,2025 - 12:15 Report Abuse
பிஜேபி ஈரோடு கிழக்கு போட்டியிலிருந்து விலக காரணம் பிஜேபியில் உள்ள தி மு க ஆதரவு மூத்த தலைவர்கள்தான் ....மேலும் இங்கு தமிழ் தேசியம் என்று சொல்லி இங்குள்ள மக்களை மூளை சலவை செய்ய காரணம் இங்கு விடியல் திராவிடனுங்க வளர்த்த ஆரியன் திராவிடன் , தமிழ் தமிழன் தமிழன்டா என்பதுதான் ...இவனுங்க எவனும் தமிழை வளர்க்கபோவதில்லை ..இந்த மொத்த கூட்டம் பின்னணி சினிமா மற்றும் தொலை கட்சி...அதன் பின்னால் மிஷனரி ....சமத்துவ பொங்கல் கொண்டாடும் கூட்டம் ... ..
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14 ஜன,2025 - 12:02 Report Abuse
பிஜேபி ஈரோடு கிழக்கு போட்டியிலிருந்து விலக காரணம் பிஜேபியில் உள்ள தி மு க ஆதரவு மூத்த தலைவர்கள்தான் .... மேலும் இங்கு தமிழ் தேசியம் என்று சொல்லி இங்குள்ள மக்களை மூளை சலவை செய்ய காரணம் இங்கு விடியல் திராவிடனுங்க வளர்த்த ஆரியன் திராவிடன், தமிழ் தமிழன் தமிழன்டா என்பதுதான் ...இவனுங்க எவனும் தமிழை வளர்க்கபோவதில்லை ..இந்த மொத்த கூட்டம் பின்னணி சினிமா மற்றும் தொலைகட்சி...அதன் பின்னால் மிஷனரி ....சமத்துவ பொங்கல் கொண்டாடும் கூட்டம் ... ..
0
0
Reply
Suresh Kesavan - Singapore,இந்தியா
14 ஜன,2025 - 10:41 Report Abuse
வாழ்த்துக்கள் ... திரு சீமானுக்கு இருக்கும் தன்னம்பிக்கை கூட பிஜேபிக்கும் அதிமுக விற்கும் இல்லை என்ன எண்ணும்போது மிக வருத்தம் அளிக்கிறது ... குறைந்த பட்சம் இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாவது தெரிவித்தால் நல்லது...
0
0
ஆரூர் ரங் - ,
14 ஜன,2025 - 11:20Report Abuse
ஆமாம் மலையாளியும் தெலுங்கரும் மோதி கொள்வதை தமிழர்களே வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். மற்றபடி கூண்டில் அடைபட்டு பிரியாணி. 500 க்கு ஓட்டு போடும் அடிமைகளை நம்பி நிற்பது அவசியமா?. அபத்தமா?.
0
0
Reply
Raj - Chennai,இந்தியா
14 ஜன,2025 - 10:10 Report Abuse
பல பெரிய கட்சிகள் களத்தில் இறங்காத போது நா. த. க. களத்தில் இறங்கி வெற்றி பெற வாழ்த்துக்கள். ?
0
0
Reply
karthik - Chennai,இந்தியா
14 ஜன,2025 - 10:08 Report Abuse
வாழ்த்துக்கள் - சேலம் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் நியாயமாக ஓட்டு போட வேண்டுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் சீமான் கட்சியை ஆதரியுங்கள்.
0
0
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
14 ஜன,2025 - 11:02Report Abuse
சேலம் மக்களுக்கு யாரும் பணம் கொடுக்கவும் தயாராக இல்லை. எதிறப்பார்த்து ஏமாறவேண்டாம்
0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement