அதிகாலையில் பஞ்சு மில்லில் தீ விபத்து! பற்றி எரிந்த பஞ்சு பேல்கள், வாகனங்கள்

கோவை; கோவை மாவட்டத்தில் மில்லில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபற்றிய விவரம் வருமாறு;


கோவை மாவட்டம் அன்னூர் அருகே அ. மேட்டுப்பாளையத்தில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சிவக்குமார் என்பவர் ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார். இதில் 100 அடிக்கு 40 அடி அளவுள்ள குடோனில் கலர் பஞ்சு மூட்டைகளை இருப்பு வைத்திருந்திருக்கிறார்.


இன்று அதிகாலை 5:00 மணிக்கு அந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலர் பஞ்சு மூட்டைகளும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டர் மற்றும் சரக்கு ஆட்டோவும் எரிந்து கருகியது.


அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரின் ஒரு பகுதியும் கருகியது அன்னூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீஸ் எஸ்.ஐ., கனகராஜ் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement