கோவை வேளாண் பல்கலையில் மாட்டுப் பொங்கல்!

கோவை; கோவை வேளாண் பல்கலையில் நடந்த பொங்கல் விழாவில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைக்கப்பட்டது.

விவசாயம் செழிக்கவும், நீர் வளம் பெருகவும் கோமாதா பட்டி மிதித்தல் நிகழ்வு நடந்தது. இதில் பசுமாடு நவதானியம் மற்றும் நீரில் கால்தடம் பதிய வைக்கப்பட்டது. தொடர்ந்து விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்வில் மாணவர்களின் மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

பொங்கல் விழாவுக்கு துணைவேந்தர் கீதாலட்சுமி, தலைமை வகித்தார் பயிர் மேலாண்மை துறை இயக்குனர் கலாராணி, பல்கலை பேராசிரியர்கள், பண்ணை தொழிலாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement