வணிக திருவிழா எதிர்த்து போராட்டம்

புதுச்சேரி; தனியார் பார் எதிரே சரக்குகளை கொட்டி, வணிக திருவிழா பரிசு கூப்பன்களை எரித்து போராட்டம் நடத்தினர்.

ரெட்டியார் பாளையம் பகுதியில் தனியார் பார் உள்ளது. இங்கு ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்குபவர்களுக்கு சுற்றுலாத்துறையால் நடத்தப்படும் வணிகத் திருவிழா பரிசு கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து, வக்கீல் சசிபாலன் தலைமையில் அப்பகுதி மக்கள் தனியார் பார் எதிரே போராட்டம் நடத்தினர். அந்த பாரில் வாங்கிய மதுவை சாலையில் ஊற்றி, பரிசு கூப்பனை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement