புதுச்சேரியில் ஓவியக் கண்காட்;சி நடிகர் சிவக்குமார் துவக்கி வைப்பு

புதுச்சேரி; புதுச்சேரியில் நடந்த ஓவியக் கண்காட்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, செயின்ட் தெரேசா வீதியில் வண்ண அருவி ஓவியக் கூடம் உள்ளது. இங்கு மண்ணின் மனம் எனும் தலைப்பில், ஓவியர் ஏழுமலையின் நீர்வண்ண ஓவியக் கண்காட்சி நேற்று மாலை துவங்கியது. நிகழ்ச்சியில், ஓவியர் சுந்தரம் வரவேற்றார். ஓவியக் கண்காட்சியை, நடிகர் சிவக்குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மூத்த ஓவியர் மணியம் செல்வன் முன்னிலை வகித்தார்

இதில், இடம்பெற்ற பல்வேறு அழகிய ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கண்காட்சி, வரும் ஜனவரி 10ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் நடக்கிறது.

Advertisement