இன்றைய நிகழ்ச்சிகள்

கோயில்

சிறப்பு அபிஷேகம், பிரதோஷ பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, பாண்டியராஜபுரம் மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், மதுரை, மதியம் 3:00 மணி முதல்.

சிறப்பு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, மாலை 4:30 மணி.

விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.

ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல்.

9ம் ஆண்டு மண்டல பூஜை, அன்னதான விழா: விஸ்வ விநாயகர் கோயில், விஸ்வநாதபுரம் கிளை, மதுரை, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை 11:00 மணி.

மண்டல பூஜை, அன்னதானம்: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், யூனியன் எண் 39, குரு தியேட்டர் கிளை, மதுரை, காலை 8:00 மணி.

கத்தோலிக்க திருச்சபை சார்பில் மாசில்லா குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான சிறப்பு திருப்பலி, ஆசி வழங்குதல்: அனைத்து ஆர்.சி., சர்ச்சுகள், மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

திருப்பாவை: அழகர் கோவில் கோ மடம் சுவாமி, மதன கோபாலசுவாமி கோயில், மதுரை, மாலை 6:00 மணி.

சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: சோபனாராணி, முன்னிலை: பவளம், காலை 7:30 மணி.

சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் - - பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.ஹோமம் ஆரம்பம்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, காலை 5:00 மணி, வஸோர்தாரா, பூர்ணாஹீத் ஹோமம், மதியம் 1:00 மணி, தீபாராதனை, மதியம் 1:30 மணி, பிரசாதம் வழங்குதல், மதியம் 2:00 மணி, ஸ்ரீ ருத்ர கிரமார்ச்சனை, மாலை 4:00 மணி, தீபாராதனை, பிரசாதம், மாலை 6:15 மணி, ஸ்ரீ ருத்ர மஹிமை, நிகழ்த்துபவர் - யக்ஞராம சோமயாஜி, ஏற்பாடு: மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி, ஸ்ரீஸத்குரு சங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி.அனுஷ வைபவம்: சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ மடம் ஸமஸ்தானம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி, ஸ்ரீ மஹா பெரியவர்: நிகழ்த்துபவர் - ரேவதி சுப்புலட்சுமி, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

எம்.சி.ஏ., 96 -பேட்ஜ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, மற்றும் ஹெரிடேஜ் ஓட்டல், மதுரை, காலை 10:00 மணி முதல்.

பட்டிமன்றம்:- குடும்பத்தை வழிநடத்துவதில் மிகுந்த பொறுப்புடையர்வர்கள்: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: முன்னாள் தாளாளர் கண்ணன், ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 10:00 மணி.

இரட்டை காப்பியங்களில் சமண பெளத்த தடயங்கள் - ஆய்வரங்கம்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஆய்வுரை: உதவி பேராசிரியர் மாரியப்பன், ஏற்பாடு: தமிழ்த்துறை, மதியம் 12:00 மணி.பட்டமளிப்பு விழா: அம்பிகா பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் சோலைமலை, சிறப்பு விருந்தினர்: பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன், காலை 11:00 மணி.

பொது

வாகை வேலைவாய்ப்பு முகாம்: மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள், காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.

சவுராஷ்டிரா மாணவர்களுக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு சவுராஷ்டிரா ஸபா, 23, மீனாட்சி நகர் மெயின்ரோடு, வில்லாபுரம், மதுரை, காலை 10:00 மணி முதல்.

குளிர்கால முகாம்: சின்மயா மிஷன், 7 வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா தேவி குரூப், சின்மயா யுவ கேந்திரா, காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

இலவச நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், சிறப்பு விருந்தினர்: ஹெர்போகேர் இயற்கை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் நவீன் பாலாஜி, பங்கேற்பு: காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் முதல்வர் தேவதாஸ், ஊட்டச்சத்து மற்றும் உணவு நிபுணர் சிவக்குமார், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

மருத்துவம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம்: ஏ.எச்.ஏ.பி., சென்டர், அண்ணாமலை இல்லம், 14, மருதுபாண்டியர் தெரு, வித்யா காலனி, கே.கே. நகர், மதுரை, காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

மூளை மற்றும் முதுகு தண்டுவட சிறப்பு முகாம்: பாரதி இன்பினிட்டி, மருத்துவமனை, வளர் நகர் பின்புறம், மதுரை, காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

இலவச பல் சீரமைப்பு மற்றும் காது, மூக்கு, தொண்டை, கழுத்து அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. விளையாட்டு

ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் செஸ் போட்டி: அமிகா ஓட்டல், மதுரை மற்றும் வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.சி., பள்ளி, மதுரை, ஏற்பாடு: ஆனந்த் செஸ் அகாடமி, தமிழக செஸ் அசோசியேஷன், மதுரை செஸ் வட்டம், காலை 9.30 மணி முதல்.

கண்காட்சி

புத்தகக் கண்காட்சி: சவிதா பாய் மேல்நிலைப்பள்ளி, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், திருநகர் அனைத்து வியாபாரிகள் சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை, காலை 9:00 மணி முதல்.

அடவி புகைப்படக் கண்காட்சி -பல்லுயிரால் உருவாகும் காடு: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

ஜூவல்லரி விற்பனை கண்காட்சி: ஓட்டல் லாவிவாண்டா, மாட்டுத்தாவணி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.

எம்.ஈ.சி., வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

Advertisement