சாலையில் திரிந்த நாயால் விபத்து; தம்பதி படுகாயம்

பாகூர்; சாலையில் சுற்றித்திரிந்த நாயால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தம்பதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், வெள்ளப்பாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 55; விவசாயி. இவரது மனைவி கோதை 48. இவர்கள் நேற்று முன்தினம் இரவு லாஸ்பேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து புறப்பட்டு வெள்ளபாக்கம் நோக்கி எலெக்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.

ஸ்கூட்டரை சீனிவாசன் ஓட்டினார். அரியாங்குப்பம் அடுத்த டோல்கேட் பகுதி அருகே சென்ற போது, திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடி, ஸ்கூட்டரின் மீது மோதியது. நிலை தடுமாறி இருவரும் விழுந்து படுகாயமடைந்தனர்.

இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement