அறிவுத்திருக்கோயிலில் உலக தியான விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் அறிவுத்திருக்கோயிலில் உலக தியான விழா நடந்தது. செயலாளர் பழனிசாமி, வரவேற்றார். இயக்குநர் தாமோதரன் தலைமை வகித்தார். பொருளாளர் மோகனவேலு நன்றி கூறினார்.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.,பொறியியல் கல்லுாரியில் உலக தியான விழா ஏற்பாடு செய்த கருத்தரங்கில் திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை பேராசிரியர் சங்கரேஸ்வரி பேசினார். ஹாட்புல்நெஸ் இன்ஸ்டிடியூட் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை பேராசிரியர் பிரசாந்தி பேசினார். வேதாத்திரி மகரிஷி பள்ளியில் குழந்தைகளுக்கு தியானத்தின் மகத்துவம் பற்றியும்,தியானம் செய்யும் முறை பற்றியும் பள்ளி தாளாளர் தாமோதரன் எடுத்துரைத்தார். மாணவர்கள் தியானத்தில் பங்கேற்றனர்.

Advertisement