விதி மீறி செயல்பட்ட விடுதி உரிமையாளர் மீது வழக்கு

மூணாறு : மாங்குளம் ஊராட்சியில் முனிபாறை பகுதியில் விதிமுறைகள் மீறி செயல்பட்ட தங்கும் விடுதியின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட முனிபாறையில் தனியார் தங்கும் விடுதியில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 12 பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் தங்கும் விடுதியில் சோதனையிட்டனர்.

அதில் சுற்றுலா பயணிகள் முறையான ஆவணங்கள் வைத்திருந்த நிலையில், தங்கும் விடுதி ' லைசென்ஸ்' உள்பட எவ்வித ஆவணங்கள் இன்றி செயல்பட்டதும், வெளிநாட்டு பயணிகளின் தகவல்களை பதிவு செய்வது உள்பட நடைமுறைகளை பின்பற்றாமல் இருந்ததும் தெரியவந்தது. அது தொடர்பாக விடுதி உரிமையாளர் கொச்சியை சேர்ந்த வினித்மேனோன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement