'பார்ச்சூன் பார்க்' ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட வாங்க!

திருப்பூர்; ஆங்கிலப் புத்தாண்டு 2025ஐ வரவேற்கும் வகையில், திருப்பூர், அவிநாசி ரோடு, 15 வேலம்பாளையம் பிரிவு ரோட்டில் உள்ள நட்சத்திர விடுதி பார்ச்சுன் பார்க் ஓட்டலில் நாளை இரவு சிறப்பு விருந்து மற்றும் கோலாகல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பார்ச்சுன் பார்க் ஓட்டல் பொது மேலாளர் சுஜித் கூறியதாவது: விருந்தினர்களுக்காக 2025 ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். மிமிக்ரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள், இசை வெள்ளத்தில் மிதக்கச் செய்ய பிரபல மியூசிக்கல் பேண்ட், 100க்கும் மேற்பட்ட அசைவ, சைவ உணவு வகைகளின் அணிவகுப்பு 'பபே' விருந்து என பல்வேறு மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன.

கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள குடும்பம் குடும்பமாக புக்கிங் செய்து வருவது மகழ்ச்சியைத் தருகிறது. 9150089338 மற்றும் 9150089337 என்ற எண்களில் அழைத்து கூடுதல் விபரங்கள் அறிந்துகொண்டு புக்கிங் செய்யலாம். இவ்வாறு, கூறினார்.

Advertisement