'வாழ்க்கையில் வளமாக வாழ வழி'

அவிநாசி; அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் நடைபெற்று வரும் தொடர் கம்பராமாயம் சொற்பொழிவில், நேற்று ஆன்மிகப் பேச்சாளர் ஜெயமூர்த்தி பேசியதாவது:

ஒருவர் நம்மிடம் உதவிகள் எதிர்பார்த்து இருப்பவரேயானால், அந்த நம்பிக்கைக்கு நாம் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். மனிதர்களுக்கு சிந்தனைகள் ஒரே மாதிரி இருக்காது. ஆனால் அந்த சிந்தனைகளை இறை பக்தியுடன் செயலாக மாற்றினால் வெற்றி பெறலாம்.

ஒருவருடைய பலம் அறிந்து அதன் பின் நம் வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும். கோபத்தால் ஆக்கமான செயல்கள் நடந்ததாக சான்றுகள் இல்லை. கோபம் எப்பேர்ப்பட்ட செல்வாக்கையும் சொல்வாக்கையும் அழிக்கும் ஆயுதம்.

பெண், பொன், மண் இவை மீது ஆசை இல்லாதவர்கள் வாழ்க்கையில் வளமாக வாழலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement