மகா பெரிய வர் வார்ஷீக ஆராதனை
திருப்பூர்; வேதநாராயண பாடசாலை வித்யார்த்திகளின் வேத பாராயணத்துடன், திருப்பூர் ராமகிருஷ்ண பஜனை மடத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருப்பூர் ஓடக்காடு பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடத்தில், காஞ்சி காமகோடி பீடத்தின், மகா பெரியவர், 31வது வார்ஷீக ஆராதானை நேற்று நடந்தது. மாலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை, சிறப்பு வேத பாராயணம் நடந்தது.
மகா பெரியவர் விக்ரஹத்துக்கு, ருத்ராபிேஷக ஆராதனை நடந்தது. பாதுகைகளுக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
கோவையில் இருந்து வந்திருந்த வித்யார்த்திகள், சிறப்பு வேத பாராயணம் செய்தனர்.
பக்தர்கள், உலக நலன் வேண்டி வழிபாடும், ஆராதனையும் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement