பா.ஜ., மகளிர் அணியினர் மடிப்பாக்கத்தில் போராட்டம்
மடிப்பாக்கம்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு, மடிப்பாக்கத்தில் பா.ஜ., மகளிர் அணியினர் நேற்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடிப்பாக்கம், சத்சங்கம் தெருவில் நடந்த போராட்டத்தில், நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பதை போன்று, தங்களது கண்களை கட்டி, கண்ணகி கையில் சிலம்பு வைத்துள்ளது போல், கையில் சிலம்பை வைத்து, அமைதி போராட்டம் நடத்தினர்.
அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்; பாலியல் இன்னல்களுக்கு ஆளாகும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement