திருவள்ளூரில் ஜன.4ல் சைக்கிள் போட்டி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத் தில், வரும் ஜன.4ல், சைக்கிள் போட்டி நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஜன.4ம் தேதி, காலை 6:00 மணிக்கு, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக சைக்கிள் போட்டி நடக்கிறது.

இந்தியாவில் தயாரான சாதாரன சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு, முறையே 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். 4 - 10 இடம் வரை பெறுவோருக்கு, தலா 250 ரூபாய் வீதம் பரிசு வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் ஜன.3ம் தேதி, மாலை 6:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராஜனை 7401703482 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement