சாக்கடை கால்வாய் பணி தீவிரம்

தர்மபுரி: தர்மபுரி, நான்குரோடு உழவர்சந்தை அருகில், தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலை அமைந்துள்ளது. இவ்வழியாக, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், தர்மபுரி நான்கு ரோடு அருகே உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த, 10 நாட்களுக்கு மேலாக கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.


இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மேலும், இதன் அருகில் உள்ள உழவர் சந்தைக்கு காலை மற்றும் மாலை நேரத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்து, சென்ற நிலையில், இப்பகுதியில் இருந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, அடைப்பு ஏற்பட்ட சாக்கடை கால்வாயை நேற்று நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு துாய்மை பணியில் ஈடுபட்டனர்.

Advertisement