வளர்ச்சி திட்ட பணிகள்; கலெக்டர் ஆய்வு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஊட்டமலை பஞ்.,க்கு உட்பட்ட பகுதியில் இருளர் குடியிருப்பு உள்ளது. இதில், மாவட்ட பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், 13 பயனாளிகளுக்கு, 67.06 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

இப்பணியை நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார். இங்கு நடந்து வரும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து பணிகளை முடித்து, பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பி.டி.ஓ.,க்கள் சுருளிநாதன், ஷகிலா, தாசில்தார், லட்சுமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement