கிரைம் செய்திகள் ...

கத்தியை காட்டி பணம் பறித்தவர்கள் கைது



புதுக்கோட்டை மாவட்டம் துளையனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், 21. தற்போது, நீலம்பூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கடைக்கு வந்த இருவர், சிக்கன் ரைஸ் கேட்டுள்ளனர். அதற்கான பணத்தை தங்கராஜ் கேட்டுள்ளார்.

பணம் தரமுடியாது என மறுத்த இருவரும், கத்தியை எடுத்து, மிரட்டி, பணத்தை பறித்து தப்பினர். இதுகுறித்து, தங்கராஜ் சூலூர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், திருவண்ணாமலையை சேர்ந்த நிர்மல், 19 ,இருகூரை சேர்ந்த ராஜா ரவி, 27 ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சட்டம் விரோதமாக மது விற்றவர் சிறைபிடிப்பு



அன்னூர் அருகே கரியாம்பாளையத்திலிருந்து, காரமடை செல்லும் வழியில், சாலை ஓரத்தில் சட்டவிரோதமாக சிலர் மது விற்று வருகின்றனர். இது குறித்து பலமுறை கிராம மக்கள் எச்சரித்தும் விற்பனை நிறுத்தப்படவில்லை.

இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் நேற்று மது விற்ற நபரை சிறை பிடித்தனர். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மது விற்றவர், இனி இப்பகுதியில் மது விற்க மாட்டேன். மன்னித்து விடுங்கள்,' என்று கேட்டுக் கொண்டதற்காக பொதுமக்கள் அவரை விடுவித்தனர்.

'காரமடை சாலையில் மது விற்பனையால் இப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாடுவதற்கு அச்சமாக உள்ளது,' என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Advertisement