டென்னிஸ்: தக்சினேஷ்வர் வெற்றி
இந்துார்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் தக்சினேஷ்வர் முன்னேறினார்.
மத்திய பிரதேசத்தில் ஆண்களுக்கான டென்னிஸ் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தக்சினேஷ்வர், கஜகஸ்தானின் கிரிகரி லொமாகின் மோதினர்.
முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய தக்சினேஷ்வர், அடுத்த செட்டை 6-4 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் தக்சினேஷ்வர் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் விஷ்ணுவர்தன், செக் குடியரசின் டொமினிக் பாலனை 7-6, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். பிற முதல் சுற்று போட்டிகளில் இந்திய வீரர்கள் துஹான், ராவத், ஜாவியா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement