அரசு பஸ் மோதியதில் பாதயாத்திரை பக்தர் பலி
தேவதானப்பட்டி: தேனிமாவட்டம் தேவதானப்பட்டி அருகே பழநி பாதயாத்திரை பக்தர்கள் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலியானர்.
உத்தமபாளையம் கோம்பையை சேர்ந்த ராஜாங்கம் 57, பிரின்ஸ் 17, முத்தரசன் 17, உட்பட 20 பேர் கோம்பையில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு பாதாயாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பெரியகுளம் வத்தலகுண்டு ரோடு பரசுராமபுரம் அருகே சென்றபோது பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பஸ் பக்தர்கள் பின்புறம் மோதி நிற்காமல் சென்றது.
தலையில் காயமடைந்த ராஜாங்கம் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பிரின்ஸ், முத்தரசன் வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பஸ் டிரைவரை தேவதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.
விபத்து நடந்த இடத்தின் அருகே நேற்று முன்தினம் கார் மீது வேன் மோதி காரில் பயணித்த 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.