மத்திய அரசு காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
திண்டுக்கல்: ''மத்திய அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்''என, ஹிந்து மஸ்துார் சபா அகில இந்திய தலைவர் ராஜா ஸ்ரீதர் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை ரத்து செய்ய வலியுறுத்தினோம். அதை மத்திய அரசு புறக்கணித்தது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்திய தொழிலாளர் மாநாட்டையும் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தவில்லை. விரைவில் நடத்த வேண்டும். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மாநில அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கி சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கும் மத்திய அரசு, விவசாய கடன்தள்ளுபடி செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement