வழிநெடுக இறைச்சிக்கழிவு தெருநாய்கள் படையெடுப்பு
தண்ணீர் வீண்
திருமுருகன்பூண்டி, 5வது வார்டு, விநாயக் கார்டன் - தன்வர்ஜின நகரில் குழாய் உடைந்து தண்ணர் வீணாகிறது. தேங்கும் நீரால் சாலையும் சேதமாகிறது.
- பழனிசாமி, தனவர்ஜின நகர். (படம் உண்டு)
செங்குந்தபுரம் முதல் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் சாலை முழுதும் வழிந்தோடுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- அருண், செங்குந்தபுரம் (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
புதுராமகிருஷ்ணாபுரம் இரண்டாவது வீதியில், கால்வாய் சுத்தம் செய்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. தேங்கும் கழிவுநீரால் கொசுத்தொல்லை அதிகமாகிறது.
- செந்தில்குமார், புதுராமகிருஷ்ணாபுரம். (படம் உண்டு)
குப்பை தேக்கம்
பெத்திச்செட்டிபுரம், முதல் வீதியில் இருந்து நொய்யல் ஆறு செல்லும் வழிநெடுகிலும் குப்பை, இறைச்சிக்கழிவு கொட்டப்படுகிறது. அவற்றை சாப்பிட நாய்கள் படையெடுக்கின்றன. தேங்கியுள்ள குப்பை அள்ளுவதுடன், குப்பை தொட்டியும் வைக்க வேண்டும்.
- பாலு, பெத்திச்செட்டிபுரம். (படம் உண்டு)
அவிநாசி, செம்பியநல்லுார் ஊராட்சி, முத்தம்மாள் நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- மகேஷ்குமார், முத்தம்மாள்நகர். (படம் உண்டு)
கழிவுநீரால் அவதி
திருப்பூர், தாராபுரம் ரோடு, ஐ.டி.ஐ., வளாகம் முன்புறம் கழிவுநீர் வழிந்தோடுகிறது. கழிவுநீரை மிதித்தபடியே மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- ராமசாமி, தாராபுரம் ரோடு. (படம் உண்டு)
ரியாக் ஷன்
உடைப்பு சீரமைப்பு
கருவம்பாளையம், கே.வி.ஆர்., நகர், ஒலிம்பிக் பேக்கரி வீதியில், பாதாள சாக்கடை கால்வாய் மூடி உடைந்திருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி மூலம் மூடி மாற்றப்பட்டு விட்டது.
- சுரேஷ், கே.வி.ஆர்., நகர். (படம் உண்டு)
சரியானது ராட்டினம்
புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், வடக்கு உழவர் சந்தை அருகே, மாநகராட்சி பூங்காவில் குழந்தைகள் விளையாடும் சறுக்கு ராட்டினம் உடைந்திருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் ராட்டினம் சரிசெய்யப்பட்டுள்ளது.
- உமாசங்கர், எஸ்.வி., காலனி. (படம் உண்டு)