ஷட்டர்கள் திருட்டு; 2 பேர் கைது

திருப்பூர்; காங்கயம், சிவன்மலை ஊராட்சியில் கான்ட்ராக்ட் பணி பயன்பாட்டுக்காக, குருக்கத்தி ரோட்டில் உள்ள பள்ளி வளாகத்தில், 14 ஷட்டர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஊராட்சி தலைவர் துரைசாமி அளித்த புகாரின் பேரில், காங்கயம் போலீசார் விசாரித்தனர்.

அதில், ஈரோடு, சென்னிமலையை சேர்ந்த முருகானந்தம், 26 மற்றும் சஞ்சீவ், 24 ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement