தி.மு.க., சார்பில் மருத்துவ முகாம்
துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, வாலிபாளையம் பகுதி தி.மு.க., மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., மருத்துவ அணி சார்பில், இருதயம், பல் மற்றும் கண் பரிசோதனை முகாம், நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது. ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் அறக்கட்டளை, தி ஐ பவுண்டேசன் முகாமை ஒருங்கிணைத்தனர். இருநுாறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றனர்.முன்னதாக முகாமை, வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். கிளை செயலாளர் உசேன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் நாகராசன், தொகுதி பொறுப்பாளர் மாலதி, மருத்துவ அணி மாவட்ட பொறுப்பாளர் கோபு சிதம்பரம் முன்னிலை வகித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement