'ஆதார்' திருத்த சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் 'டிவி' நிறுவன கட்டுப்பாட்டில் இயங்கும் நிரந்தர ஆதார் பதிவு மையங்களிலும், சுழற்சி முறையில் ஞாயிறு தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. நேற்று, செவந்தாம்பாளையத்தில் திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கும் ஆதார் மையத்தில் சிறப்பு முகாம் நடந்தது. ஆதாரில் முகவரி மாற்றம், மொபைல் எண், பயோமெட்ரிக் புதுப்பித்தல் பல்வேறு திருத்தங்களுக்காக, மொத்தம் 32 பேர் பதிவு செய்தனர். வரும் ஜன., 5ம் தேதி, ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் ஆதார் மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Advertisement