புதிய உச்சத்தை எட்டிய யு.பி.ஐ., பரிவர்த்தனைகள்

1

சென்னை:கடந்த டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட யு.பி.ஐ., பரிவர்த்தனைகளின்
எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்து, 1,673 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக என்.பி.சி.ஐ., எனும் தேசிய பணப் பரிமாற்றக் கழகம் தெரிவித்துள்ளது.



கடந்த 2016ம் ஆண்டு யு.பி.ஐ., சேவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஒரு மாதத்தில் இதுவே அதிகபட்ச பயன்பாடாகும். கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், பரிவர்த்தனை மதிப்பும் 8 சதவீதம் அதிகரித்து, 23.25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.



ஒட்டுமொத்தமாக கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட யு.பி.ஐ., பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 46 சதவீதம் அதிகரித்து, 17,200 கோடியாக உயர்ந்துள்ளது. இது, 2023ம் ஆண்டில் 11,800 கோடியாக இருந்தது. பரிவர்த்தனை மதிப்பு 183 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 35 சதவீதம் உயர்ந்து 247 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


கடந்த டிசம்பர் மாதத்தில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 54 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. சராசரி பணப் பரிமாற்ற மதிப்பு 74,900 கோடி ரூபாயாக இருந்தது.இது தவிர, ஐ.எம்.பி.எஸ்., பாஸ்டேக், ஏ.இ.பி.எஸ்., எனும் ஆதார் பேமென்ட் முறை ஆகிய
அனைத்துமே, மாதாந்திர அடிப்படையில் பரிவர்த்தனை மதிப்பு மற்றும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளன.

Advertisement