ஏற்றத்துடன் துவங்கிய புத்தாண்டு

• புத்தாண்டின் முதல் நாளும், வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளுமான நேற்று, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இரண்டு நாள் சரிவுக்கு, சந்தை முற்றுப்புள்ளி வைத்தது


• நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோதே, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், சந்தை குறியீடுகள் ஏற்றம் கண்டன. பிற்பகல் வர்த்தக நேரத்தின் போது, நிப்டி 178 புள்ளிகள்; சென்செக்ஸ் 617.48 புள்ளிகள் வரை உயர்ந்தன முடிவில், சற்று குறைந்து சந்தை குறியீடுகள் நிறைவடைந்தன.


• நிப்டி குறியீட்டில், ரியல் எஸ்டேட், உலோகம் தவிர, அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகளும் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக, வாகனத்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 1.34 சதவீதம் ஏற்றம் கண்டது. ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 1.11 சதவீதம் இறக்கம் கண்டது


• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள 21 துறைகளில், 19 துறைகள் சார்ந்த குறியீடு ஏற்றத்துடனும்; 2 துறைகள் சார்ந்த குறியீடுகள் இறக்கத்துடனும் வர்த்தகமாகின.



அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,783 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றிருந்தனர்.


கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.88 சதவீதம் உயர்ந்து, 74.64 அமெரிக்க டாலராக இருந்தது.



ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி 85.64 ரூபாயாக இருந்தது.



டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 மாருதி
 மஹிந்திரா & மஹிந்திரா
 லார்சன் அண்டு டூப்ரோ
 பஜாஜ் பைனான்ஸ்

 டாடா மோட்டார்ஸ்

அதிக இறக்கம் கண்டவை

 ஹிண்டால்கோ
 டாக்டர்.ரெட்டீஸ்
 அதானி போர்ட்ஸ்
 ஓ.என்.ஜி.சி.,
 டாடா ஸ்டீல்

Advertisement