எந்தெந்த வங்கி கணக்குகள் மூடப்படும்?

1

புதுடில்லி:பராமரிப்பின்றி இருக்கும் மூன்று வகையான வங்கி கணக்குகள் மூடப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.



வங்கிக் கணக்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், மோசடி களைத் தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகள், நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளாக கருதப்பட்டு மூடப்படும்


2 ஓராண்டு மற்றும் அதற்கு மேலாக பரிவர்த்தனைகள் நடைபெறாமல் இருக்கும் கணக்குகள், மூடப்படும்



3பல நாட்களாக இருப்பு ஏதும் இன்றி, பூஜ்ஜிய இருப்புடன் தொடரும் கணக்குகளும் மூடப்பட உள்ளது.



கே.ஒய்.சி., விதிகள் பின்பற்றப்படுவதையும் வாடிக்கையாளர் குறித்த தகவல்கள் சரியாக
இருப்பதை உறுதி செய்யவும், இந்த நடவடிக்கை உதவும். இந்த கணக்குகளை மீண்டும்
செயல்பாட்டுக்கு கொண்டு வர விரும்பும் வாடிக்கையாளர்கள், அந்தந்த வங்கிக் கிளைகளை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement