விபத்தில் பலி 3 ஆக உயர்வு
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே கருங்குளத்தில் நடந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
மதுரை கே.கே.நகர் கருணாநிதி மகன் வாசுதேவன் 40; ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இவர், மனைவி அனிதா 34, மகன்கள் கனிஷ்கர் 13, அருள்மொழிவர்மன் 14, ஆகியோர் நவ.,30ல் காரில் அழகன்குளத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அனிதாவின் தந்தையை பார்க்க வந்தனர். வாசுதேவன் காரை ஓட்டியபோது கருங்குளத்தில் எதிரில் செங்கல் ஏற்றி வந்த மினி லாரியில் மோதியதில் அனிதா, அருள்மொழிவர்மன் பலியாகினர்.
வாசுதேவன், கனிஷ்கர் ஆகியோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வாசுதேவன் நேற்று இறந்தார். இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement