வண்டலுார் பூங்கா 10,000 பேர் வருகை

தாம்பரம்:வண்டலுார் உயிரியல் பூங்காவை, புத்தாண்டு தினமான நேற்று, 10 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக, வண்டலுார் பூங்கா திகழ்கிறது. நடுத்தர மக்களுக்கு ஏற்ற, பொழுது போக்கு இடமாக உள்ள, இப்பூங்காவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பார்வையாளர்கள் வருகின்றனர்.

வார நாட்களில், சராசரியாக, ஐந்தாயிரம் பேர் வருகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். டிச.25 கிறிஸ்துமஸ் தினத்தன்று, 10 ஆயிரம் பேர், பூங்காவை கண்டு ரசித்தனர்.

ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. நேற்று, 10 ஆயிரம் பேர், பூங்காவை கண்டு ரசித்தனர்.

Advertisement