கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி

ஒட்டன்சத்திரம்,:கேரளாவில் இருந்து இறைச்சிக் கழிவுகளுடன் துாத்துக்குடி சென்ற கன்டெய்னர் லாரி திண்டுக்க்ல மாவட்டம் சத்திரப்பட்டி டோல்கேட்டில் பிடிபட்டது.

கேரளாவில் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகள் கடக்கும் போது துர்நாற்றம் வீசுவதாக திண்டுக்கல் மாவட்ட ரோட்டோர பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் செய்து வந்தனர்.

இதனிடையே நேற்று காலை பாலக்காட்டில் இருந்து துாத்துக்குடிக்கு கேரளா பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரி பொள்ளாச்சி- ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொது மக்கள் புகார்படி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி டோல்கேட்டில் லாரியை மடக்கி சோதனை செய்தார்.

பெட்டி பெட்டியாக மீன், கோழி, நண்டு கழிவுகள் அதிக அளவில் இருந்தது.

சத்திரப்பட்டி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இதில் துாத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு உரம் தயாரிக்க கொண்டு செல்வது தெரியவர லாரியை போலீசார் விடுவித்தனர்.

Advertisement