பழங்குடி குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

கூடலுார்,; கூடலுார், ஜீன்பூல் தாவர மையத்தில் வனத்துறையினர், பழங்குடியின குழந்தைகளுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.

கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில் வனத்துறையினர், பழங்குடி குழந்தைகளுடன் நேற்று, காலை புத்தாண்டை கொண்டாடினர்.

அதில், முண்டகன்னு, கோழிக்கொல்லி, புளியம்வயல், நெல்லிக்கண்டி, காபிமூலா பழங்குடி கிராமங்களை சேர்ந்த குழந்தைகள், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர் வீரமணி முன்னிலையில் கேக் வெட்டினர்.

நிகழ்ச்சியில், வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு பேசுகையில், ''பழங்குடி குழந்தைகள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்த கூடாது. உங்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால், அதனை வனத்துறை செய்து தரும்,'' என்றார்.

* பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரகத்தின் வன ஊழியர்கள் இணைந்து, கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். அதில், வனச்சரகர் ரவி வன ஊழியர்களுக்கு கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். வனவர் சுதீர் குமார் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றனர்.

* தேவாலா போலீசார் சார்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, தேவாலா பஜாரில் டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதில், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.

* கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நள்ளிரவு, 12:00 மணிக்கு போலீசார் இளைஞர்களுடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடினர்.

கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபாகரன், எஸ்.ஜ., குகனேஸ்வரன் முன்னிலையில், கேக் வெட்டப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

Advertisement