திருவள்ளூர்: புகார் பெட்டி; பகலிலும் தொடர்ந்து எரியும் உயர்மட்ட பால மின்விளக்கு

பகலிலும் தொடர்ந்து எரியும் உயர்மட்ட பால மின்விளக்கு



கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், முத்துக்கொண்டாபுரத்தில் கொசஸ்தலை ஆற்றை கடக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது.

இந்த உயர்மட்ட பாலத்தை இரவில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக கடக்க இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உயர் மின்விளக்குகள் பகலிலும் எரிந்தபடியே உள்ளது. இதனால், ஊராட்சிக்கு வீண் செலவீனம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

எனவே பகலில் எரிவதை அணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.கிரிதரன்,

முத்துக்கொண்டாபுரம்.

Advertisement