திருவள்ளுவர் சிலை விழா 30 இடங்களில் ஒளிபரப்பு

சென்னை: கன்னியாகுமரி கடலில், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவி, 25 ஆண்டுகள் ஆகின்றன. இதை, தமிழக அரசு வெள்ளி விழாவாக, இன்று முதல் மூன்று நாட்கள் சிறப்பிக்கிறது.

இதையொட்டி, கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 5:00 மணி முதல் 31ம் தேதி காலை 9:00 மணி வரை நடைபெறும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை, சென்னை மக்கள் கண்டுகளிக்கும் வகையில், முக்கிய இடங்களில் எல்.இ.டி., திரை அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் 15 மண்டலங்களில், தலா இரண்டு இடங்கள் வீதம், 30 இடங்களில் எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்பட உள்ளது.





மண்டலம் இடங்கள்

திருவெற்றியூர் அஜெக்ஸ் பஸ் நிறுத்தம், சன்னிதி தெருமணலி மணலி புதுநகர் 10வது பிரதான சாலை, மாத்துார் பூங்காமாதவரம் எம்.ஆர்.எச்., சாலை, பரப்பன்குளம் புது பூங்காதண்டையார்பேட்டை அகஸ்தியா திரையரங்கு அருகில், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலைராயபுரம் மின்ட் பஸ் நிறுத்தம், எழும்பூர் ரயில் நிலையம்திரு.வி.க., நகர் கொளத்துார் சட்டசபை அலுவலகம், மேயர் அலுவலகம்அம்பத்துார் எம்.டி.எச்., சாலை, மங்கள் ஏரி பூங்காஅண்ணா நகர் வில்லிவாக்கம் பஸ் நிறுத்தம், திரு.வி.க., நகர் பூங்காதேனாம்பேட்டை மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம்கோடம்பாக்கம் ஜீவா பூங்கா, ஜெய் நகர் பூங்காவளசரவாக்கம் நொளம்பூர் பாரதி சாலை, ஆற்காடு சாலைஆலந்துார் முகலிவாக்கம், நங்கநல்லுார் 4வது பிரதான சாலைஅடையாறு பெசன்ட் நகர் கடற்கரை, வேளச்சேரி ரயில் நிலையம்பெருங்குடி பாலவாக்கம் கடற்கரை, மடிப்பாக்கம் ஏரிசோழிங்கநல்லுார் நீலாங்கரை கடற்கரை, செம்மஞ்சேரி சுனாமி நகர்

Advertisement