கரூரில் வரும் 4ல் நகரத்தார் சங்கம் சார்பில் நோன்பு விழா
கரூரில் வரும் 4ல் நகரத்தார் சங்கம் சார்பில் நோன்பு விழா
கரூர், ஜன. 2-
கரூர் நகரத்தார் சங்க செயலாளர் மேலை பழனியப்பன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை தீபத்திருநாளில் விரதம் தொடங்கி, 21 நாட்களுக்கு பிறகு நோன்பு விழா நடப்பது வழக்கம். 21ம் நாளில் சஷ்டியும், சதயமும் கூடி வரும் நாளான வரும், 4ல் மாலை, 5:00 மணிக்கு, 38 வது நோன்பு விழா, கரூர் அழகம்மை மஹாலில் நடக்கிறது. அதில், நகரத்தார் சமூகத்தினர் விநாயகர் வழிபாடு நடத்த உள்ளனர். பிறகு, மங்கள பொருட்கள் ஏலம் நடக்கும். ஏற்பாடுகளை சங்க தலைவர் செந்தில்நாதன், பொருளாளர் குமரப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement