கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கற்பூரவள்ளி வாழை அறுவடை


கிருஷ்ணராயபுரம், ஜன. 2-
வல்லம் பகுதியில், கற்பூரவள்ளி
வாழைத்தார்கள் அறுவடை பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லம், கொம்பாடிப்பட்டி, பிள்ளபாளையம், சிந்தலவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாய்க்கால் பாசன முறையில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். அதிகம் பேர், கற்பூரவள்ளி ரகங்களை சாகுபடி செய்துள்ளனர். இதன் விற்பனை அதிகமாக இருப்பதால், சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு, கற்பூரவள்ளி ரக கன்று நடப்பட்ட வாழைத்தார்கள், தற்போது அறுவடை செய்யும் வகையில் விளைந்துள்ளன. வியாபாரிகளிடம் விலை பேசி, விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மழை குறைந்த நிலையில், மீண்டும் வாழைத்தார்கள் விற்பனை சூடுபிடித்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நேரில் சென்று கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று, 250 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் சென்னை, மதுரை, பழனி, கரூர், கோவை ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, சில்லரை விற்பனை
கடைகளுக்கு விற்கப்படுகிறது.

Advertisement