ஜமீன் எண்டத்துார் சாலை கல்குவாரி லாரிகளால் நாசம்

பவுஞ்சூர்:பவுஞ்சூர் பகுதியில் மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் இருந்து ஜமீன் எண்டத்துார் கிராமத்திற்குச் செல்லும் தார் சாலை உள்ளது.

ஒழவெட்டி, நெட்ரம்பாக்கம், சின்னவெண்மணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.

இருசக்கர வாகனம், கார், லாரி, பேருந்து என, ஏராளமான வாகனங்கள் தினசரி சாலையில் கடந்து செல்கின்றன.

ஜமீன் எண்டத்துார் பகுதியில் செயல்படும் கல்குவாரிக்கு தினமும், அதிக பாரம் ஏற்றிக்கொண்டு நுாற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால், ஆங்காங்கே சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதனால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலை நடுவே உள்ள பள்ளத்தில் சிக்கி தடுமாறி விழுகின்றனர்.

துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைத்து, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement