அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டம்


அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆங்கில

புத்தாண்டு விழா கொண்டாட்டம்


கரூர், கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், நேற்று ஆங்கில புத்தாண்டு விழா நடந்தது. அதில், நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கருக்கு, நிர்வாகிகள், தொண்டர்கள் கேக், சாக்லெட் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் திரு விகா உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement