ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்து தர்ணா

ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பைப் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டி, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்-டுகள் உள்ளன. இங்கு, தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவரா-கவும், செயல் அலுவலர் சோமசுந்தரம் உள்ளனர். நேற்று மாலை, டவுன் பஞ்., அலுவலகத்தில் இருந்த இரும்பு பைப்புகளை எடுத்-துச்சென்ற மினி ஆட்டோவை முற்றுகையிட்டு, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில், கவுன்சிலர்கள் ஒப்படைத்தனர்.
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் இருந்த இரும்பு பைப்புகளை முறைகேடாக எடுத்துச்சென்ற நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டி, தி.மு.க.,வை சேர்ந்த டவுன் பஞ்சாயத்து துணை தலைவர் ராஜா தலைமையில், 10 கவுன்சிலர்கள் ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம், ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்-தினார். மேலும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததால் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement