பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு: இடைத்தரகர் இன்றி அரசே நேரடி கொள்முதல் செய்ய கோரிக்கை

நாமக்கல்: 'பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை, வ ிவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் இன்றி, அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்' என, உழவர் பெருந்த-லைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
வரும், 2025 தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஜன., 9 முதல் பொங்கல் பரிசு வினியோகம் துவங்கும் என, அரசு தெரி-வித்துள்ளது. இந்நிலையில், 'பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்-கப்படும் கரும்பை, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்' என, கோரிக்கை எழுந்-துள்ளது.
இதுகுறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளி-யிட்ட அறிக்கை:
தமிழக அரசு, தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டி-கைக்கு, 'பொங்கல் தொகுப்பு' அறிவித்துள்ளது. 2023ல், பொங்கல் தொகுப்பை வழங்குவதற்கு, கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்கள் மூலமாகவும், தி.மு.க., கட்சியில் உள்ள நபர்களிடம் மட்டும் செங்கரும்பு கொள்முதல் செய்யப்
பட்டது.
தற்போது, 'பொங்கல் தொகுப்பு' வழங்குவதற்கு, தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலம் அரசியல் கட்சிகள் மற்றும் இடைத்தர-கர்கள் இல்லாமல், இருவரையும் புறம் தள்ளவிட வேண்டும். மேலும், பாகுபாடின்றி, செங்கரும்பு சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளிடம் இருந்தும், அரசே நேரடியாக செங்க-ரும்பு கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement