புகார் பெட்டிகும்மிருட்டான சாலை வாகன ஓட்டிகள் அவதி

கும்மிருட்டான சாலை வாகன ஓட்டிகள் அவதி



ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், தண்டுரை, 20வது வார்டில் கந்தசாமி 3வது தெரு உள்ளது. இங்கு, பட்டாபிராம் -- பூந்தமல்லி பிரதான சாலையில், மின் விளக்கு ஒன்று, பல மாதங்களாக எரியாமல் உள்ளது.

இதனால், அணைக்கட்டு சேரி கூவம் மேம்பாலம் அருகே இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மின்விளக்குகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மதியழகன்,

பட்டாபிராம்.

Advertisement