இன்று பள்ளிகள் திறப்பு: 3ம் பருவ வகுப்பு துவக்கம்

உடுமலை,; அரையாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்றாம் பருவத்திற்கான வகுப்புகள் ஆரம்பமாகிறது.

வழக்கமாக ஒவ்வொரு பருவத்திற்கும், விடுமுறையின் இறுதியில் தான் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட பொருட்கள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்.

மூன்றாம் பருவத்திற்கான புத்தகங்கள், அரையாண்டு விடுமுறையின் துவக்கத்தில் திருப்பூர் மற்றும் தாராபுரம் கல்வி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்பட்டு விட்டது.

விடுமுறை முடிந்து இன்று மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புகின்றனர். வகுப்பறைகள் தயார் நிலையில் வைத்திருப்பதற்கும், பள்ளி வளாகம் முழுவதும் துாய்மையாக பராமரிக்கவும், மாணவர்களுக்கு தாமதமில்லாமல் நோட்டுப்புத்தகங்களை வினியோகிக்கவும் கல்வித்துறை அலுவலர்கள் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி பள்ளிகள் துாய்மைப்படுத்தப்பட்டு, மூன்றாம் பருவ வகுப்புகள் துவங்க தயாராக வைக்கப்பட்டுள்ளன.

Advertisement