மா.திறனாளி தொழிற்பயிற்சி பூங்கா அமைக்க கோரிக்கை

தி.கோடு: திருச்செங்கோட்டில், 'சஷம் தமிழ்நாடு' என்ற அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் உரிமைகள் தினவி-ழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட மாநாடு நடந்தது.


நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு பேசுகையில், ''மாற்றுத்திறனாளிகள் திறன்-களை கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை உரு-வாக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு கடைகள் அமைக்கவும் சாலையோர கடைகள் அமைக்கவும் தான் நிதி உதவி அளிப்பதாக தெரிவித்தார். இதனை மாற்று திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், மாற்-றுத்திறனாளியாக இருந்து வாழ்க்கையில் உயர்ந்த கல்யாண சுந்த-ரத்திற்கு, கொ.ம.தே.க., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில் விருது வழங்கி பாராட்டினார். கிருஷ்ணகுமார் பேசு-கையில், ''திருச்செங்கோட்டில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தொழிற்பயிற்சி பூங்கா அமைக்க வேண்டும்,'' என்றார். நகர பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement