அமாவாசையொட்டி நாமக்கல் உழவர் சந்தையில் 36 டன் காய்கறிகள் ரூ.15 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல்: இன்று அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்-தையில், நேற்று ஒரே நாளில், 36 டன் காய்கறிகள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் உழவர் சந்தையில், நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்-கின்றனர்.
பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து அவற்றை வாங்கி செல்-கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்-றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்-தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்-களை வாங்கி செல்வது வழக்கம்.
இன்று (டிச., 30) அமாவாசையை முன்னிட்டு, நேற்று, வழக்-கத்தை விட உழவர் சந்தையில், காய்கறிகள் விறுவிறுப்பாக வியா-பாரம் நடந்தது. மொத்தம், 193 விவசாயிகள் காய்கறி, பழங்-களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம், 30,270 கிலோ காய்கறிகள் மற்றும் 5,960 கிலோ பழங்கள், 15 கிலோ பூக்கள் என மொத்தம், 36,245 கிலோ எடையுள்ள விளை பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 7,249 பொதுமக்கள் வாங்கி சென்-றனர். அதன் மூலம், 14 லட்சத்து, 99,535 ரூபாய்க்கு விற்பனை-யானது.
தக்காளி, ஒரு கிலோ, 24 ரூபாய், கத்தரி, 48 ரூபாய், வெண்டை, 50 ரூபாய், சின்ன வெங்காயம், 60 ரூபாய், பெரிய வெங்காயம், 42 ரூபாய், பூண்டு, 380 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது.