நேஷனல் மாடல் பள்ளி ஆண்டு விழா

கோவை : கருமத்தம்பட்டி, பதுவம்பள்ளியில் அமைந்துள்ள நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பிற்கான, ஆண்டு விழா நடந்தது.

ஒன்றாம் வகுப்பிற்கு கோவை ஒரிகாமி ஐ.ஜி.சி.எஸ்.சி., பள்ளியின் துணை முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் இரண்டாம் வகுப்பிற்கு கோவை, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியின் துணை முதல்வர் லாவண்யா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

மாணவர்கள் தங்கள் தனித்திறனை எப்படி வளர்க்கலாம் என விளக்கப்பட்டது.

தொடர்ந்து, வண்ண ஆடைகளில் பலவிதமான நடனங்களை, மாணவர்கள் அரங்கேற்றினர். அவர்களின் திறமையை கவுரவிக்கும் வகையில், பரிசு வழங்கப்பட்டது.

பள்ளியின் முதல்வர் நிர்மலா மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement