சாத்துார் சர்வீஸ் ரோட்டில் பெயர்ந்துள்ள பேவர் பிளாக்

சாத்துார்: சாத்துார் கோவில்பட்டி சர்வீஸ் ரோட்டில் பெயர்ந்துள்ள கற்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் தாமிரபரணி திட்ட குழாய் பதிக்கப் பட்டுள்ளது.

இந்த ரோட்டில் கனரகவாகனங்கள் செல்வதால் அடிக்கடி குழாயில்உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது.

இதனால் தார் ரோடு சேதம் அடைந்தது .இதனை தொடர்ந்து குறிப்பிட்ட துாரம் வரை பேவர் பிளாக் பதிக்கப்பட்டது. குழாய் உடைப்பு ஏற்பட்டாலும் பள்ளம் தோண்டி மீண்டும்பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது.

சமீபத்தில் பெய்த மழையில் சர்வீஸ் ரோட்டில் பள்ளம் தோண்டிய இடத்தில் மழை நீர் தேங்கியது.

இதில் கனரக வாகனங்கள் சென்ற போது பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்தன. ரோட்டில் தற்போது பெயர்ந்த கற்கள் குவியலாகஉள்ளன. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் கற்குவியல் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisement