ஆமத்துார் கண்மாய் மதகு சேதம்
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துார் கண்மாய் மதகு சேதமாகி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.
ஆமத்துார் கண்மாய் பாசனத்தை நம்பி 100 ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. கடந்த மாதங்களில் பெய்த கனமழையால் நீர்வரத்து ஓடைகளில் அதிகமாக தண்ணீர் வந்து கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
மேலும் 2023 டிசம்பரில்பெய்த கனமழையால் கண்மாய் தண்ணீர் நிரம்பி கரைகள் உடையும் நிலை ஏற்பட்டது. பலவீனமாக இருந்த கரைப்பகுதிகளில் மண்ணை கொட்டி பெரும் அசம்பாவிதத்தை தடுத்தனர்.
ஆனால் அதன் பின் கண்மாய் முறையாக துார்வாரப்படவில்லை.தற்போது கண்மாய் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இங்குள்ள மடைகள், மதகுகள் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமான நிலையில் உள்ளது.
மேலும் தற்போது கண்மாய் மதகின் பக்கவாட்டு சுவர் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் சுவர் பலவீனமடைந்து இடியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் மதகின் பக்கவாட்டு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்எதிர்பார்க்கின்றனர்.