ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

1

மதுரை : மதுரை அரசு போக்குவரத்து கழகம் முன்பு போக்குவரத்து ஓய்வுபெற்ற நல அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

மாநிலத் தலைவர் கிருஷ்ணன் பேசுகையில் ''புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 110 மாத டி.ஏ., நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பலன்களை வழங்க வேண்டும். எங்களின் ரூ.1500 கோடி பி.எப்., பிடித்தம் செய்த தொகை எங்கே. அகவிலைப்படி குறித்து அரசு பேச வேண்டும். வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களை பகைத்துக் கொண்டால் எதிர்க்கட்சி பதவி கூட தரமாட்டோம்'' என்றார்.

நிர்வாகிகள் தேவராஜ், சவுரிதாஸ், ஜேம்ஸ் கஸ்பர் ராஜ், ஜெயபாண்டியன், ராஜேந்திரன், சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement